அம்பாந்தோட்டை பகுதியில் வீட்டு வசதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா – இலங்கை ஒப்பந்தம்
October 28 , 2017 2632 days 863 0
தென் துறைமுக நகரில் நடைபெற்ற பொதுநிகழ்வு ஒன்றில், 1200 வீடுகள் கட்டுவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டன.
கட்டப்படவுள்ள வீடுகள் 1200-ல், 600 வீடுகள் தென்பகுதி மாகாணத்திலும், மீதமுள்ளவை இலங்கையின் பிற பகுதிகளிலும் கட்டப்படவுள்ளன. இதில் 25 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள மாதிரி கிராமங்களிலும் வீடுகள் அமையவுள்ளன.
அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள நகரசபை ஆகும்.
இந்தியப் பெருங்கடலினுள் மத்தியக்கிழக்குப் பகுதிக்கும், கிழக்கு ஆசியப் பகுதிக்கும் இடையேயான எரிசக்தி கடல்வழிப் பாதையின் நடுவே இது அமைந்திருக்கின்றது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தற்போதைய காலகட்டத்தில் முக்கியமான செயலாகும். மேலும் சிங்கள பெரும்பான்மையினர் அதிகம் வசிக்கும் தெற்கு மாகணப்பகுதியில் இந்தியாவின் வீட்டு வசதித்திட்டத்தினை நடைமுறைபடுத்துவது என்பதும் முக்கியமான நிகழ்வாகும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தினை தடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது.