TNPSC Thervupettagam

அம்பேத்கர் ஜெயந்தி - ஏப்ரல் 14

April 16 , 2022 864 days 335 0
  • இந்த தினமானது பீம் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
  • பாபா சாகேப் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
  • இந்த தினம் 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அதிகாரப்பூர்வப் பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் பாபா சாகேப் அவர்களின் 131வது பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது.
  • டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை (தலைமை வடிவமைப்பாளர்) என்று அழைக்கப் படுகிறார்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்.
  • டாக்டர் பீம் அவர்களுக்கு 1990 ஆம் ஆண்டில் நாட்டின் உயரியக் குடிமை விருதான பாரத ரத்னா  (மரணத்திற்குப் பிறகு) வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்