TNPSC Thervupettagam

அம்மா சிறு மருத்துவமனைகள்

December 17 , 2020 1497 days 778 0
  • தமிழக முதல்வர் சென்னையில் “அம்மா சிறு மருத்துவமனை” திட்டத்தை டிசம்பர் 14 அன்று தொடங்கி வைத்தார்.
  • இது போன்று மொத்தம் 200 மருத்துவமனைகள் சென்னையிலும், 2,000 மருத்துவமனைகள் தமிழகத்திலும் விரைவில் திறக்கப்படும்.
  • நமது மாநிலத்தில் 1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
  • ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களிலும், ஏராளமான ஏழை மக்கள் வசிக்கும் இடங்களிலும் இந்தச் சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும்.
  • பொது ஆலோசனை மற்றும் அடிப்படை ஆய்வு நடத்த உதவும்  வகையில் ஒவ்வோர் அம்மா சிறு மருத்துவமனையிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள்.
  • இந்த  மருத்துவமனைகள் உடல் வெப்பநிலை, இரத்த ஆக்ஸிஜன், இரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், இரத்தச் சர்க்கரை, சிறுநீர் மாதிரிகள் சோதனை போன்ற அடிப்படை சுகாதார வசதிகளை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்