தமிழக முதல்வர் சென்னையில் “அம்மா சிறு மருத்துவமனை” திட்டத்தை டிசம்பர் 14 அன்று தொடங்கி வைத்தார்.
இது போன்று மொத்தம் 200 மருத்துவமனைகள் சென்னையிலும், 2,000 மருத்துவமனைகள் தமிழகத்திலும் விரைவில் திறக்கப்படும்.
நமது மாநிலத்தில் 1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களிலும், ஏராளமான ஏழை மக்கள் வசிக்கும் இடங்களிலும் இந்தச் சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும்.
பொது ஆலோசனை மற்றும் அடிப்படை ஆய்வு நடத்த உதவும் வகையில் ஒவ்வோர் அம்மா சிறு மருத்துவமனையிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள்.
இந்த மருத்துவமனைகள் உடல் வெப்பநிலை, இரத்த ஆக்ஸிஜன், இரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், இரத்தச் சர்க்கரை, சிறுநீர் மாதிரிகள் சோதனை போன்ற அடிப்படை சுகாதார வசதிகளை வழங்கும்.