இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய முன்னெடுப்புத் திட்டமாகும்.
இந்த ரோந்து வாகனங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக காவல் துறையின் சிறப்புப் பிரிவிற்கு உதவுகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் புகார்களும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரிவினால் விசாரணை செய்யப்பட விருக்கின்றன.
இந்த ரோந்து வாகனங்கள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் கீழ் செயல்படும்.
மாநில அரசு மற்றும் மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்பட்ட இந்த ரோந்து வாகனங்கள் சென்னையில் விரைவில் ரோந்துப் பணியைத் தொடங்கவிருக்கின்றன.
இந்த ரோந்து வாகனங்கள் 1091 மற்றும் 1098 என்ற தொலைபேசி எண்களின் காட்சிப் படத்தையும் கொண்டிருக்கும்.