TNPSC Thervupettagam

அம்ரித் பாரத் இரயில் நிலையம் திட்டம்

August 7 , 2023 350 days 199 0
  • நாடு முழுவதும் உள்ள 508 இரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
  • இது இரயில் நிலையங்களின் மறுசீரமைப்பினைச் செயலாக்கும் ஒரு திட்டமாகும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பைத் தொடர்ச்சியான அடிப்படையில் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அடையாளம் காணப்பட்ட இந்த 508 நிலையங்களில் குஜராத்தில் உள்ள 87 நிலையங்கள், ராஜஸ்தானில் உள்ள 83 நிலையங்கள், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 80 நிலையங்கள் மற்றும் ஹரியானாவில் உள்ள 34 நிலையங்கள் ஆகியவை அடங்கும்.
  • மொத்தமுள்ள 1,309 இரயில் நிலையங்களில், 508 இரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பின் ஆரம்பக் கட்டப் பணிக்காகத் தேர்வு செய்யப் பட்டு உள்ளன.
  • இந்த இரயில் நிலையங்கள் ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய 10 மாநிலங்களில் அமைந்துள்ளன.
  • தமிழகத்தின் சென்னை எழும்பூர் இரயில் நிலையமும் இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்