அயனிமண்டலத்தின் மின்னணு அடர்த்தி
April 26 , 2020
1677 days
634
- அயனிமண்டலத்தின் மின்னணு அடர்த்தியைக் கணிக்கும் ஒரு மாதிரியை இந்தியப் புவிக் காந்த நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
- இது ஒரு செயற்கை நரம்புசார் வலைப் பின்னல் (ANN - Artificial Neural Networks) அடிப்படையிலான உலகளாவிய அயனிமண்டலத்தின் மாதிரியாகும்.
- செயற்கை நரம்புசார் வலைப் பின்னல்கள் மனித மூளையின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.
- பூமியில் தொடர்பு மற்றும் வழிகாட்டுதலிற்கு இது மிகவும் முக்கியமானது.
- அயனிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் படிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
- சூரியனில் இருந்து தோன்றும் காந்த மேகங்களால் ஏற்படும் புவி காந்தப் புயல்களைப் பற்றியும் அறிய இது உதவுகிறது.
- பூமியின் காந்த மண்டலத்தில் உருவாகும் காந்தப் புயல்கள், சூரியக் காற்றினால் ஏற்படுகிறது.
Post Views:
634