மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகமானது, சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு உயிரினங்களின் இனப்பெருக்க உரிம விதிகளை அறிவித்துள்ளது.
அயலின விலங்குகளின் காப்பினப் பெருக்கத்தினை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான உரிம முறையை இந்தியா அறிமுகப் படுத்தியுள்ளது.
அருகி வரும் நிலையில் உள்ள வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) மீதான சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனங்கள் இதில் அடங்கும்.
இது காப்பக உரிமையாளர்கள் கரடிகள், பாண்டாக்கள், நாய்கள், பூனைகள், குரங்குகள், லெமூர் விலங்கு, பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பல்வேறு விலங்குகளின் இனப் பெருக்கத்திற்கான உரிமங்களைப் பெற வழி வகுக்கிறது.
இந்த விதிமுறைகள் CITES உடன்படிக்கையினை சிறப்பாகச் செயல்படுத்தவும், நாட்டில் வனவிலங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் முயல்கின்றன.
இந்தப் புதிய விதிகளின் கீழ், 2022 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் IVவது பட்டியலின் முதலாவது பின் இணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள, பாதுகாக்கப் பட்டுள்ள உயிரினங்களை இனப்பெருக்கம் செய்ய வைப்பதில் ஈடுபட்டுள்ள நபர்கள், இந்த சட்டம் தொடங்கப் பட்ட 90 நாட்களுக்குள் வளர்ப்பாளர் உரிமத்திற்கு என்று விண்ணப்பிக்க வேண்டும்.