TNPSC Thervupettagam

அயோடின் கலக்கப்பட்ட உப்பின் மிகக் குறைந்த நுகர்வு – தமிழ்நாடு

September 11 , 2019 1906 days 708 0
  • “அயோடின் கலந்த உப்பின்” அளவை அளவிடுவதற்காக நடத்தப்பட்ட ஒரு தேசியக் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாடு மாநிலமானது அயோடின் கலந்த உப்பின் குறைவான நுகர்வைக் கொண்டுள்ளது.
  • ஆனால் இது நாட்டில் மூன்றாவது மிகப் பெரிய உப்பு உற்பத்தி மாநிலமாகும் (முதலாவது - குஜராத்).
  • இந்த ஆய்வானது அயோடின் குறைபாட்டுப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான இந்திய கூட்டிணைவு மற்றும் தில்லியில் உள்ள எய்ம்ஸின் நியூட்ரிஷன் இன்டர்நேஷனல் ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்பட்டது.
  • 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் அயோடின் கலக்கப்பட்ட உப்பின் அளவை மதிப்பிடுவதற்காக வீடுகளில் உள்ள சமைக்கப்படும் உப்பின் மாதிரிகளில் இருக்கும் அயோடின் அளவை இந்த ஆய்வு சோதித்தது.
  • அயோடின் என்பது ஒரு முக்கியமான நுண் ஊட்டச்சத்து ஆகும். அயோடின் குறைபாடு பின்வருவனவற்றை ஏற்படுத்துகின்றது.

முன்கழுத்துக் கழலை

தைராய்டு குறைவாக சுரத்தல்

குறை பிரசவங்கள்

மன வளர்ச்சி குன்றல்

உளவியல் தசை இயக்கப் பிரச்சினைகள்

கருக் கலைப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்