சென்னை காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சாதி ஒழிப்புப் போராளி அயோத்தி தாச பண்டிதர் அவர்களின் சிலையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
அப்போதைய மதராஸ் மாகாணத்தில், தேனாம்பேட்டை-ஆயிரம் விளக்கு பகுதியில் 1845 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியன்று அயோத்தி தாசர் பிறந்தார்.
அவர் தமிழ், ஆங்கிலம், பாலி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றவர் ஆவார்.
தமிழன், திராவிடன் ஆகிய சொற்களை அரசியல் அடையாளமாக உருவாக்கிய முதல் நபர் ஆவார்.
அயோத்தி தாச பண்டிதர் “திராவிடப் பேரொளி” மற்றும் ‘தென்னிந்தியாவின் சமூகச் சீர்திருத்தங்களின் தந்தை’ என்றும் அழைக்கப்படுகிறார்.
அவர் 1885 ஆம் ஆண்டு ஜான் ரத்தினத்துடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழைத் தொடங்கினார்.
1907 ஆம் ஆண்டு ‘ஒரு பைசா தமிழன்’ என்ற தமிழ்ப் பத்திரிகையைத் தொடங்கினார்.
அவர் 1898 ஆம் ஆண்டில், சென்னையில் ‘சாக்கிய புத்த சங்கத்தை’ நிறுவினார்.
1891 ஆம் ஆண்டில் திராவிட மகாஜன சபையையும் 1876 ஆம் ஆண்டில் அத்வைதானாந்த சபையையும் தொடங்கினார்.