TNPSC Thervupettagam

அயோத்தி தாச பண்டிதர் சிலை

December 2 , 2023 231 days 359 0
  • சென்னை காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சாதி ஒழிப்புப் போராளி அயோத்தி தாச பண்டிதர் அவர்களின் சிலையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • அப்போதைய மதராஸ் மாகாணத்தில், தேனாம்பேட்டை-ஆயிரம் விளக்கு பகுதியில் 1845 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியன்று அயோத்தி தாசர் பிறந்தார்.
  • அவர் தமிழ், ஆங்கிலம், பாலி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றவர் ஆவார்.
  • தமிழன், திராவிடன் ஆகிய சொற்களை அரசியல் அடையாளமாக உருவாக்கிய முதல் நபர் ஆவார்.
  • அயோத்தி தாச பண்டிதர் “திராவிடப் பேரொளி” மற்றும் ‘தென்னிந்தியாவின் சமூகச் சீர்திருத்தங்களின் தந்தை’ என்றும் அழைக்கப்படுகிறார்.
  • அவர் 1885 ஆம் ஆண்டு ஜான் ரத்தினத்துடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழைத் தொடங்கினார்.
  • 1907 ஆம் ஆண்டு ‘ஒரு பைசா தமிழன்’ என்ற தமிழ்ப் பத்திரிகையைத் தொடங்கினார்.
  • அவர் 1898 ஆம் ஆண்டில், சென்னையில் ‘சாக்கிய புத்த சங்கத்தை’ நிறுவினார்.
  • 1891 ஆம் ஆண்டில் திராவிட மகாஜன சபையையும் 1876 ஆம் ஆண்டில் அத்வைதானாந்த சபையையும் தொடங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்