TNPSC Thervupettagam

அரசின் அறிவிப்புகள் - ஜூன் 03

June 5 , 2021 1328 days 697 0
  • தென் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் ஒரு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
  • இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் கலைஞர் நினைவு நூலகம் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  • தமிழ் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இலக்கிய மாமணிவிருது வழங்கப் படும்.
  • உயர் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது வசிக்க விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.
  • திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
  • நகர்ப்புற அரசு பேருந்துகளில் வழங்கப்பட்டுள்ள இலவச பயணச் சலுகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்