TNPSC Thervupettagam

அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர்) ஆணை (5வது திருத்தம்) மசோதா

July 29 , 2023 359 days 196 0
  • மாநிலங்களவையானது 2022 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர்) ஆணை (ஐந்தாவது திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • இது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு சமூகங்களைப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டது.
  • புயின்யா, பூயுயான் மற்றும் புயான் ஆகியச் சமூகங்களை பரியா, பூமியா, பரியா ஆகிய இணைப் பெயரோடுச் சேர்ப்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
  • மேலும், கோண்டிற்குப் பதிலாக கோந்த் என்ற பெயரையும், பாண்டோ சமூகம் மற்றும் தனுஹர் மற்றும் தனுவர் சமூகங்களின் பெயர்களின் மூன்று தேவநாகரி வடிவங்களை இப்பட்டியலில் சேர்ப்பதற்காகவும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
  • இது சட்டத்தின் 32வது உள்ளீட்டில் கிசான் சமூகத்தைச் சேர்க்க உள்ளது.
  • இது 41வது உள்ளீட்டில் சௌன்ரா மற்றும் சான்ரா சமூகங்களையும், 42 என்ற புதிய உள்ளீட்டில் பிஞ்சியா சமூகத்தினையும் சேர்க்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்