TNPSC Thervupettagam

அரசியல் மற்றும் பொது வாழ்க்கை விருதுகள்

March 6 , 2018 2358 days 713 0
  • இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நடிகரும் அரசியல்வாதியுமான திரு.சத்ருகன் சின்ஹாவிற்கு, கலை மற்றும் அரசியல் துறையில் அவருடைய பங்களிப்பிற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

  • ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது இங்கிலாந்தின் ஆசியன் வாய்ஸ் வார செய்தித்தாளால் வழங்கப்படுகிறது. இத்தோடு 13வது ஆண்டாக இவ்விருது வழங்கப்படுகிறது.
  • இவ்விருது உள்ளூர் சமூகத்திலோ, பொது வாழ்விலோ முக்கியமான மாற்றத்தை ஏற்படும் தனிநபரை அங்கீகரிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இவ்விருதை பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இங்கிலாந்தில் அமைச்சராக இருக்கும் சஜித் ஜவித் பெற்றுள்ளார்.
  • தொலைக்காட்சி நிறுவனத்திற்கான விருதை இந்தியா வண்ணத் தொலைக்காட்சியும், வான்வழிக்கான விருதை ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் பெற்றுள்ளன.
  • சிறிய கொல்கத்தாவிலிருந்துK. (Little Kolkata to U.K.) என்ற வங்க உணவு விருந்து சங்கத்தை (Bengali Cuisine Supper Clubs) ஆரம்பித்த தொழிலதிபர் பிரபிர் சட்டோபாத்யாய் இந்த ஆண்டிற்கான புதிய தொழில் முனைவோருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்