கேரள முதல்வர் அவர்கள், CSpace எனப்படும் மாநில அரசிற்குச் சொந்தமான இணைய தள ஒளிப்பரப்புச் சேவை வழங்கும் (OTT) தளத்தினை சமீபத்தில் தொடங்கி வைத்து உள்ளார்.
இந்தியாவின் முதல் அரசாங்க ஆதரவு பெற்ற இந்த OTT இயங்குதளமானது ஒரு உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்து ஒளிப்பரப்புவதில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.
இது கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தினால் (KSFDC) நிர்வகிக்கப்படும்.
CSpace இயங்கு தளமானது, கேரள மாநில அரசின் கலாச்சார விவகாரங்கள் துறையின் ஆதரவின் கீழ் இயங்குகிறது.