அரசுக் குடியிருப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான வலைதளம் & செல்லிடப் பேசி பயன்பாடு
October 14 , 2019 1872 days 630 0
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி, “m-ஹரியாலி” என்ற புதிய செல்லிடப் பேசிபயன்பாட்டையும், “அரசுக் குடியிருப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு” என்ற வலைதளத்தையும் புதுதில்லியில் அறிமுகப் படுத்தினார்.
இது மக்களை மரங்கள் நட்டு வளர்ப்பதற்கும் பசுமை இயக்கங்கள் வழி நடப்பதற்கும் ஊக்குவிக்கிறது.
இது தாவரங்களில் தானியங்கிப் புவிக் குறியீட்டை வழங்குகிறது. இது பயனர்கள் எளிதாக பயன்படுத்துவதற்கு உகந்த வகையில் இருக்கின்றது. மேலும் இது எந்த ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப் பேசியிலும் வேலை செய்கிறது.
செயலி மற்றும் வலைதளம் ஆகிய இரண்டையும் தேசியத் தகவல் மையம் & வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய எந்தவொருத் தகவலையும் பொதுமக்கள் இவைகளில் பதிவேற்றலாம். அவை www.epgc.gov.in என்ற இணையதளத்தில் காண்பிக்கப்படும்.