அரசுத் தொழிலாளர் காப்பீட்டு (Employees State Insurance - ESI) சட்டத்தின் கீழ், தனது பங்களிப்பை 6.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக அரசு குறைத்துள்ளது.
பணியளிப்பவர்களின் பங்களிப்பு 4.75 சதவிகிதத்திலிருந்து 3.25 சதவிகிதமாகக் குறைக்கப்படுகின்றது.
தொழிலாளர்களின் பங்களிப்பு 1.75 சதவிகிதத்திலிருந்து 0.75 சதவிகிதமாகக் குறைக்கப்படுகின்றது.
இது 3.6 கோடி தொழிலாளர்களுக்கும் 12.85 இலட்சம் பணியளிப்பவர்களுக்கும் பயன்படவிருக்கின்றது.
இந்தக் குறைக்கப்பட்ட பங்களிப்பு விகிதமானது ESI திட்டத்தின்கீழ் அதிகப் பணியாளர்களையும் முறைசார் துறையில் அதிக தொழிலாளர்களையும் கொண்டு வரவிருக்கின்றது.
ESI
1948 ஆம் ஆண்டின் ESI சட்டமானது காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு மருத்துவம், நிதி, மகப்பேறு, மாற்றுத் திறன் மற்றும் பிறரைச் சார்ந்துள்ளவர்கள் ஆகியோர்களுக்குப் பயன்களை அளிக்கின்றது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் இந்திய அரசு ESI சட்டத்தின் கீழ் பங்களிப்பு விகிதத்தை நிர்ணயிக்கின்றது.