2 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு, 10 ஆண்டு மற்றும் 14 ஆண்டு என்ற கால வரையறையினைக் கொண்டுள்ள முக்கிய குறியீட்டுப் பத்திரங்கள் மற்றும் வீத மாற்றுப் பத்திரங்கள் ஆகியவை ஒரு பொது விலை அடிப்படையிலான ஏல முறையில் வழங்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இருப்பினும் 30 ஆண்டு மற்றும் 40 ஆண்டு காலவரையறையுள்ள முக்கிய குறியீட்டுப் பத்திரங்கள் பலவிலை அடிப்படையிலான ஏல முறையிலேயே வழங்கப்படும்.
அரசுப் பத்திரங்களானவை வர்த்தகம் செய்வதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப் படுகின்றன.
அரசுப் பத்திரங்களானவை மத்திய (அ) மாநில அரசுகளால் வழங்கப் படுகின்றன.
இது அரசின் கடன்களை அங்கீகரிக்கிறது.
இரு வகையிலான பத்திரங்கள் உள்ளன.
குறுகிய காலப் பத்திரங்கள் – இவை கருவூலப் பத்திரங்கள் என அழைக்கப் படுகின்றன.
இதன் கால வரம்பு ஒரு வருடத்திற்கும் குறைவானதாகும்.
இது 91 நாள், 182 நாள் மற்றும் 364 நாள் ஆகிய மூன்று காலவரம்புகளில் வழங்கப் படுகிறது.
நீண்ட காலப் பத்திரங்கள் – இவை வழக்கமாக அரசுப் பத்திரங்கள் அல்லது தேதியிட்ட பத்திரங்கள் என அழைக்கப் படுகின்றன.
இவற்றிற்கான காலவரம்பு ஒரு வருடத்திற்கும் மேலானது ஆகும்.