TNPSC Thervupettagam

அரசுமுறைச் செயல்பாடுகளில் பெண்களின் பங்கேற்பிற்கான சர்வதேச தினம் - ஜூன் 24

June 26 , 2023 424 days 146 0
  • உலகெங்கிலும் உள்ள அரசுமுறை மற்றும் முடிவெடுக்கும் துறைகளில் பங்கு பெற்று உள்ள ஊக்கமிக்கப் பெண்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • ஆர்மீனிய நாட்டின் தூதர் டயானா அப்கர் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பெண் அரசு முறை அதிகாரியாக கருதப் படுகிறார்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான கருத்துரு என்பது "தடைகளை உடைத்தல், எதிர்காலத்தை வடிவமைத்தல் : நிலையான மேம்பாட்டிற்கு அரசுமுறை செயல்பாடுகளில் பெண்களின் பங்கேற்பு" என்பதாகும்.
  • இந்த நாளானது கடந்த ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 76வது அமர்வில் உருவாக்கப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, 31 நாடுகளின் அரசு மற்றும்/அல்லது அரசாங்கத்தின் தலைவர்களாக 34 பெண்கள் பணியாற்றுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்