TNPSC Thervupettagam

அரபிக்கடலில் அடிக்கடி உருவாகும் புயல்கள் : இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை

August 10 , 2021 1077 days 530 0
  • தீவிரமான வானிலை நிகழ்வுகளின் 50 ஆண்டுகால (1970-2019) தரவுநிலைகளின் அடிப்படையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது சமீபத்திய தசாப்தத்தில் தீவிரமான புயல்கள் உள்ளிட்ட மோசமான வானிலை நிகழ்வுகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது.
  • உலகம் முழுவதும் சராசரி வெப்பநிலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
  • 1891-2020 ஆகிய காலக்கட்டத்தின் போது வட இந்தியப் பெருங்கடலில் உருவான புயல்களின் கடந்தகாலத் தரவுகளை மதிப்பிடுகையில்,
    • 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரபிக்கடலில் சமீபத்திய சில ஆண்டுகளில் அதி தீவிரப் புயல்கள் உருவாவது அதிகரித்துள்ளது எனவும்
    • வங்காள விரிகுடாவில் மாற்றம் எதுவும் இல்லாமல் அதே நிலையில் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்