TNPSC Thervupettagam

அரபு கூட்டமைப்பு மாநாடு 2018

April 18 , 2018 2413 days 723 0
  • அரபு கூட்டமைப்பின் நாடுகள் சந்திக்கின்ற சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு அரபு அரசாங்கங்களின் கூட்டு செயல்பாட்டை (Arab joint action)  மேம்படுத்துவதற்காக ஏப்ரல் 15 அன்று சவுதி அரேபியாவின் தஹ்ரானில் (Dhahran )  29-வது அரபு கூட்டமைப்பு மாநாடு (Arab League Summit)  துவங்கியுள்ளது.
  • சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் இம்மாநாட்டிற்குத் தலைமை வகித்துள்ளார். இம்மாநாட்டிற்கு “ஜெருசலேம் மாநாடு” (Jerusalem Summit)  என அவர் பெயரிட்டுள்ளார்.
  • அனைத்து அரபு மக்களின் மனசாட்சிகளிலும் பாலஸ்தீனம் பொதிந்துள்ளது (engraved in the conscience of all Arab people) என்பதை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் நினைவூட்டுவதற்காக இம்மாநாட்டிற்கு ஜெருசலேம் மாநாடு எனப் பெயரிட்டுள்ளனர்.
  • அரபு நாட்டுத் தலைவர்களின் வருடாந்திர கூடுகையான இம்மாநாட்டில், ஈரானுக்கு எதிரான ஒன்றுபட்ட நிலைப்பாட்டிற்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது.
  • கடந்த வாரம் சிரியாவின் கிழக்கு கவுட்டா (Eastern Ghouta) மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் உறைவிடப்  பகுதிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலுக்குப் (Chemical attack) பதிலடியாக போரால் பாதிக்கப்பட்டுள்ள  சிரியாவில் அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் பிரிட்டன் நாடுகள்  வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு இம்மாநாடு தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்