TNPSC Thervupettagam

அரபு லீக்கில் மீண்டும் சிரியா

May 10 , 2023 567 days 270 0
  • 12 வருட இடைநீக்கத்திற்குப் பிறகு சிரியாவை அரபு லீக் உடன் மீண்டும் இணைய எகிப்தில் நடைபெற்ற கெய்ரோ கூடுகையில் அரபு அரசாங்கப் பிரதிநிதிகள்  அனுமதி அளித்துள்ளனர்.
  • 12 ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாக இருந்து மாறிய மோதலின் ஆரம்பத்தில் அரபு லீக்கில் இருந்து சிரியாவின் உறுப்புரிமையை நீக்கப் பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் முதல் இதுவரை கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் கொல்லப் பட்டு உள்ளதோடு அந்த நாட்டில் போருக்கு முந்தைய மக்கள் தொகையான 23 மில்லியனில் பாதி மக்கள்  இடம் பெயர்ந்து உள்ளனர்.
  • அரபு லீக் என்பது மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து அரபு நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அகில அரபு நாடுகளின் ஒரு கூட்டமைப்பு ஆகும்.
  • இது 1944 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டிரியா நெறிமுறையின் படி 1945 ஆம் ஆண்டு மார்ச் 22 தேதியன்று  எகிப்தின் கெய்ரோவில் உருவாக்கப்பட்டது.
  • தற்போது இது  22 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்