12 வருட இடைநீக்கத்திற்குப் பிறகு சிரியாவை அரபு லீக் உடன் மீண்டும் இணைய எகிப்தில் நடைபெற்ற கெய்ரோ கூடுகையில் அரபு அரசாங்கப் பிரதிநிதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாக இருந்து மாறிய மோதலின் ஆரம்பத்தில் அரபு லீக்கில் இருந்து சிரியாவின் உறுப்புரிமையை நீக்கப் பட்டது.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் கொல்லப் பட்டு உள்ளதோடு அந்த நாட்டில் போருக்கு முந்தைய மக்கள் தொகையான 23 மில்லியனில் பாதி மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர்.
அரபு லீக் என்பது மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து அரபு நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அகில அரபு நாடுகளின் ஒரு கூட்டமைப்பு ஆகும்.
இது 1944 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டிரியா நெறிமுறையின் படி 1945 ஆம் ஆண்டு மார்ச் 22 தேதியன்று எகிப்தின் கெய்ரோவில் உருவாக்கப்பட்டது.