TNPSC Thervupettagam

அரல் கடல் வற்றிய நிலை

April 26 , 2024 212 days 268 0
  • 1960 ஆம் ஆண்டுகளின் ஆரம்பகாலம் வரையில் உலகின் நான்காவது பெரிய ஏரியாக இருந்த அரல் கடல் வறண்டு விட்டது.
  • அரல் கடல் வறண்டு வருவதால் கடந்த 30 ஆண்டுகளாக மத்திய ஆசியா 7 சதவீதம் தூசுப் படலம் நிறைந்துள்ளதாக மாறியுள்ளது.
  • அரல்கும் பாலைவனம் ஆனது தற்போது புவியில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான தூசுப்படல மூலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
  • 1985 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், விரிவடைந்து வரும் பாலை வனத்தில் இருந்து வெளியாகும் தூசு 14 டன்னிலிருந்து கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து 27 மில்லியன் டன்கள் ஆக அதிகரித்துள்ளது.
  • மத்திய ஆசியாவின் இரண்டு பெரிய நதிகளான அமு தர்யா (பழங்காலத்தில் ஆக்ஸஸ்) மற்றும் சிர் தர்யா (ஜாக்ஸார்ட்ஸ்) ஆகியவை அரல் கடலில் கலந்தன.
  • உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய ஏழு மத்திய ஆசிய நாடுகளில் அதன் நதிப் படுகை பரவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்