TNPSC Thervupettagam

அரவிந்த் நிலவாழ் மரப் பல்லி

August 24 , 2022 697 days 421 0
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அகஸ்தியமலை பகுதியில் இருந்து சமீபத்தில் வளைந்த கால் கொண்ட மரப் பல்லி இனமானது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்தப் புதிய மரப் பல்லி இனத்திற்கு புகழ்பெற்ற மெல்லுடலிகள் ஆய்வாளர் N.A. அரவிந்த் அவர்களின் நினைவாக அரவிந்த் நிலவாழ் மரப் பல்லி என்று பெயர் வழங்கப் பட்டுள்ளது.
  • உருவவியல் மற்றும் மூலக்கூறு டிஎன்ஏ தரவுகளில் உள்ள அதன் தனித்தன்மையின் அடிப்படையில் இந்தப் புதிய இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
  • இதன் அறிவியல் பெயர் சிர்ட்டோடாக்டைலஸ் அரவிந்தி என்பதாகும்.
  • இந்த இனமானது இதுவரையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் மற்றும் தக்கலை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே கண்டறியப் பட்டு உள்ளது.
  • இந்தப் பகுதியானது தமிழ்நாட்டின் அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்டது.
  • அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் காணப்படுகின்ற மரப் பல்லி என்பது ஒரு ஊர்வன இனமாகும்.
  • கெக்கோனிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியத் தங்க நிற மரப் பல்லி இனமானது இந்தியாவின் தமிழ்நாடு, ஒரிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்டது.
  • கெக்கோனிடே குடும்பத்தைச் சேர்ந்த மரப் பல்லி இனமானது இந்தோ-மலாயன் பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்