இந்திய அரசானது, மூத்தப் பொருளாதார நிபுணரான டாக்டர் அரவிந்த் விர்மானி என்பவரை நிதி ஆயோக் அமைப்பின் ஒரு முழு நேர உறுப்பினராக நியமித்துள்ளது.
இந்த நியமனத்திற்குப் பிரதமர் மோடி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பானது, டாக்டர் V.K. சரஸ்வத், பேராசிரியர் ரமேஷ் சந்த் மற்றும் டாக்டர் V.K. பால் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக விர்மானி பணியாற்றினார்.