TNPSC Thervupettagam

அராஷ்-டோரா எரிவாயு தளம் மீதான சர்ச்சை

August 6 , 2023 478 days 244 0
  • வளைகுடாக் கடற்பகுதியில் உள்ள டோரா என்ற கடல் பகுதியில் உள்ள எரிவாயு தளம் மீது உரிமை கோரி இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக சர்ச்சையாக இருந்து வருகிறது.
  • இது குவைத்தின் கிழக்கு கடல்சார் எல்லையில் அமைந்துள்ளது.
  • இந்த டோரா வாயு தளம் 1967 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • ஈரான் அரசினால் அராஷ் என்று அழைக்கப்படும் இந்த தளமானது, தனது கடல் எல்லை வரம்பு வரை நீண்டுள்ளது என்று உரிமை கோருகிறது.
  • குவைத் மற்றும் சவூதி நாட்டு அதிகாரிகள், அந்தப் பகுதியில் உள்ள வளங்களைத் தோண்டி எடுப்பதற்கு அவர்களுக்கு மட்டுமே முழு இறையாண்மை அதிகாரம் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்