TNPSC Thervupettagam

அரிதான மற்றும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள தாவரங்கள் பாதுகாப்புத் திட்டம்

October 7 , 2023 416 days 351 0
  • தமிழ்நாடு, அரிய, அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள தாவரங்களில் சிலவற்றை (சில தமிழகத்தில் மட்டுமே காணப்படும்) காக்கும் பணியைத் தொடங்கி உள்ளது.
  • நாட்டிலுள்ள முதன்மையான நிறுவனங்களின் 30க்கும் மேற்பட்ட வகைபிரித்தல் வல்லுநர்கள் தமிழக மாநிலத்தின் தாவரங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த ஒரு மதிப்பீட்டினை மேற்கொண்டு 25 தாவரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
  • வகைபிரித்தல் வல்லுநர்கள் ஆரம்பத்தில் இந்த நடவடிக்கைக்காக 100 தாவரங்களைப் பட்டியலிட்டனர்.
  • சில இனங்கள் 500 அல்லது 1,000 எண்ணிக்கைக்கும் குறைவாக உள்ள வன இனங்களாக விடப்பட்டன.
  • 100 தாவர இனங்களைக் கொண்டப் பட்டியலில் மீதமுள்ள தாவரங்களின் மதிப்பீடு மேற்கொள்ளப் படும்.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மூன்று இனங்கள் - டைசாக்சைலம் மலபாரிகம், கோசினியம் ஃபெனெஸ்ட்ராட்டம் மற்றும் மிரிஸ்டிகா மலபாரிகா அவற்றின் மருத்துவ மதிப்புகளுக்காக அதிகளவில் அழிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்