TNPSC Thervupettagam

அரிய டார்வின் குளவிகளின் 5 புதிய இனங்கள்

December 19 , 2024 4 days 48 0
  • இந்தியா மற்றும் தாய்லாந்தில் டார்வின் குளவியின் துணைக் குடும்பமான மைக்ரோ லெப்டினேவினை (ஹைமனோப்டெரா:இச்நியுமோனிடே) சேர்ந்த ஐந்து புதிய குளவி இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • டார்வின் குளவிகள் ஒட்டுண்ணி குளவிகள் ஆகும் என்பதோடு அவற்றின் லார்வாக்கள் அதன் ஓம்புயிரியின் உள்ளே இருந்து உணவினை பெற்றுக் கொள்ளும்.
  • இந்தியாவில் இந்த துணைக் குடும்பத்தின் இனங்கள் கண்டறியப்படுவது இது முதல் முறையாகும்.
  • இச்நியுமோனிடே வகை குடும்பமானது, 42 துணைக் குடும்பங்களைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இதில் மைக்ரோலெப்டினே மிகச்சிறிய ஒன்றாகும்.
  • இது உலகளவில் முன்னர் அறியப்பட்ட 14 இனங்களைக் கொண்ட மைக்ரோலெப்டெஸ் என்ற ஒற்றை இனத்தைக் கொண்டுள்ளது.
  • தற்போது வரையில், 1998 ஆம் ஆண்டில் மியான்மரில் பதிவாகிய மைக்ரோலெப்டெஸ்  மலைசெய், கிழக்கத்தியப் பகுதியில் அறியப்பட்ட ஒரே இனமாகும்.
  • இந்தியாவில் பதிவான நான்கு புதிய இனங்களில், மைக்ரோலெப்ட்ஸ் சியானி வகை இனமானது தமிழ்நாட்டின் களக்காடு - முண்டந்துறை புலிகள் வளங்காப்பகத்தில் (KMTR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதர மற்ற 3 இனங்களான மைக்ரோலெப்டெஸ் கௌரிசங்கரி, மைக்ரோலெப்ட்ஸ் சந்தேஷ்கதுரி மற்றும் மைக்ரோலெப்டெஸ் டெஹ்ரியென்சிஸ் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்