TNPSC Thervupettagam

அரிய வகை டைனோசர் முட்டைகள்

January 22 , 2023 678 days 392 0
  • மத்திய இந்தியாவின் நர்மதா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள லேமென்ட்டா நில அமைப்பில் சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுப் பணியில், டைட்டானோசர் இனங்களின் 92 முட்டையிடும் தளங்களைக் கண்டறியப்பட்டுள்ளது.
  • அவை உலகில் இதுவரை வாழ்ந்த டைனோசர்களில் மிகப் பெரியவையாக கருதப் படுகின்றன.
  • இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்த டைட்டானோசர் இனங்களைப் பற்றிய முக்கியமான விவரங்களை வெளிப்படுத்தச் செய்யும் 250க்கும் மேற்பட்ட புதைபடிவ முட்டைகளை அக்குழு கண்டுபிடித்துள்ளது.
  • இந்தப் புதைபடிவங்கள் பிற்கால கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
  • மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஆறு வெவ்வேறு "ஓஸ்பீசிஸ்" (புதைப்படிவமாக்கப்பட்ட) அல்லது முட்டை இனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்