ஹைதராபாத்தில் உள்ள தேசியப் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன அறிவியல் நிபுணர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் அரிய வகை தனிமப் படிவுகளை (REE) கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தனிமங்கள் பல மின்னணுச் சாதனங்களின் முக்கிய கூறுகளாகவும் மற்றும் படமிடல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற தொழில்துறைத் துறைகளிலும் பயன்படுத்தப் படுகிறது.
அரிய வகை தனிமம் என்பது ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவற்றுடன் தனிம வரிசை அட்டவணையில் குறிப்பிட்டுள்ள லாந்தனைடு மற்றும் ஆக்டினைடு போன்ற வரிசையில் உள்ள 15 தனிமங்களையும் குறிக்கிறது.