TNPSC Thervupettagam

அரிய வகை பாம்பின் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான படிமம்

May 18 , 2022 923 days 460 0
  • லடாக்கில் உள்ள மொலாஸ் படிவுகளில் இருந்து 35 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்சோயிடே என்ற  ஒரு இனத்தினைச் சேர்ந்த பாம்பின் படிமத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • இது முன்னர் கணிக்கப்பட்டதை விட நீண்ட காலமாக இந்திய துணைக்கண்டத்தில் இந்த இனங்கள் வாழ்ந்தது குறித்த ஒரு தகவலை வெளிப்படுத்துகிறது.
  • மேட்சோயிடே என்பது அழிந்து போன, நடுத்தர அளவு முதல் பிரம்மாண்டமான அளவிலான பாம்புகளின் இனமாகும்.
  • இவை முதன்முதலில் கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் தோன்றின.
  • இவை பெரும்பாலும் கோண்ட்வானா நிலப்பகுதிகளில் பரவிக் காணப்பட்டன.
  • செனோசோயிக் காலத்தில் இவை வாழ்ந்ததற்கானப் பதிவுகள் மிகவும் அரிதாகவே உள்ளன.
  • புதைபடிவப் பதிவுகளிலிருந்து, பேலியோஜின் காலத்தின் மத்தியில் கோண்ட்வானா நிலப் பகுதியின் பெரும்பாலானப் பகுதிகளிலிருந்து முழு இனமும் மறைந்து விட்டதாக கருதப்படுகிறது.
  • இருப்பினும், இந்த இனமானது ஆஸ்திரேலியாவில், வோனாம்பி என்று கடைசியாக அறியப் பட்ட அதன் மற்றொரு இனமாக, ப்ளீஸ்டோசீன் காலத்தின் பிற்பகுதி வரை உயிர் வாழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்