அரிய வகை பாம்பின் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான படிமம்
May 18 , 2022 922 days 458 0
லடாக்கில் உள்ள மொலாஸ் படிவுகளில் இருந்து 35 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்சோயிடே என்ற ஒரு இனத்தினைச் சேர்ந்த பாம்பின் படிமத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இது முன்னர் கணிக்கப்பட்டதை விட நீண்ட காலமாக இந்திய துணைக்கண்டத்தில் இந்த இனங்கள் வாழ்ந்தது குறித்த ஒரு தகவலை வெளிப்படுத்துகிறது.
மேட்சோயிடே என்பது அழிந்து போன, நடுத்தர அளவு முதல் பிரம்மாண்டமான அளவிலான பாம்புகளின் இனமாகும்.
இவை முதன்முதலில் கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் தோன்றின.
இவை பெரும்பாலும் கோண்ட்வானா நிலப்பகுதிகளில் பரவிக் காணப்பட்டன.
செனோசோயிக் காலத்தில் இவை வாழ்ந்ததற்கானப்பதிவுகள் மிகவும் அரிதாகவே உள்ளன.
புதைபடிவப் பதிவுகளிலிருந்து, பேலியோஜின் காலத்தின் மத்தியில் கோண்ட்வானா நிலப் பகுதியின் பெரும்பாலானப் பகுதிகளிலிருந்து முழு இனமும் மறைந்து விட்டதாக கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த இனமானது ஆஸ்திரேலியாவில், வோனாம்பி என்று கடைசியாக அறியப் பட்ட அதன் மற்றொரு இனமாக, ப்ளீஸ்டோசீன் காலத்தின் பிற்பகுதி வரை உயிர் வாழ்ந்தது.