மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள லோக்டாக் ஏரியில் 90 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, கிரேட்டர் ஸ்காப் என்ற ஒரு அரிய வகை வாத்து இனமானது சமீபத்தில் தென்பட்டுள்ளது.
இது அப்பகுதியில் சடாங்மான் என்று அழைக்கப்படுகிறது.
கிரேட்டர் ஸ்காப் என்பது அனாடிடே குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான நீரில் மூழ்கி நீந்தக் கூடிய வாத்து இனமாகும்.
கூர்க்கா ரைபிள்ஸ் படைப் பிரிவின் தலைவர் L. கேம்பிள் மற்றும் இந்திய குடிமைப் பணி அதிகாரி JP மில்ஸ் ஆகியோர் முறையே 1925 ஆம் ஆண்டு ஜனவரி 25 மற்றும் 1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாத்துகளைச் சுட்டுக் கொன்றதற்கான பதிவுகள் உள்ளன.