மிக அரிதான வெள்ளை நிற பென்குயின் ஆனது சிலி நாட்டின் அண்டார்டிகாவில் கண்டறியப் பட்டுள்ளது.
கேப்ரியல் கோன்சலேஸ் விடேலா என்ற தளத்தில் கண்டறியப்பட்ட இந்த பென்குயின் ஆனது, ஆங்காங்கே சில வெள்ளை நிறத்துடன் கூடிய கருப்பு நிற இறகுகளைக் கொண்ட ஜென்டூ இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் இனமாகும்.
இந்த நிலையானது பொதுவாக ஒரு மரபணு சார்ந்ததாக இருந்தாலும், மன அதிர்ச்சி காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
இந்த பென்குவின் இனங்களின் கண்களும் அலகுகளும் வழக்கமான நிறத்தினைக் கொண்டிருப்பதால் இது தோல் வெளிர்தல் நிலையிலிருந்து வேறுபட்டு உள்ளது.
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தப் பகுதியில் ஓர் அரிய வெள்ளை நிறப் பென்குயின் தென்பட்டது.