TNPSC Thervupettagam

அரிவாள் செல் இரத்த சோகை நோயினை ஒழிப்பதற்கான திட்டம்

February 3 , 2023 815 days 423 0
  • 2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிப்பதற்கான ஒருதிட்டத்தைத் தொடங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்படும்.
  • இது விழிப்புணர்வு உருவாக்கம், பாதிக்கப்பட்டப் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள 0 முதல் 40 வயதுக்குட்பட்ட ஏழு கோடி நபர்களின் பொது உடல் பரிசோதனை ஆகியவற்றினை உள்ளடக்கியதாகும்.
  • உடலின் பல்வேறுப் பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதே இரத்தச் சிவப்பணுக்களின் ஒரு முதன்மைப் பணியாகும்.
  • அரிவாள் செல் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் ஆக்ஸிஜனைச் சுமந்துச் செல்லும் திறன் பாதிக்கப் படுகிறது.
  • அரிவாள் செல்கள் என்பது அரிவாளின் வடிவத்தைப் போலவே C வடிவத்தில் மாறுகின்ற செல்களாகும்.
  • அவை தன்னைத் தானேச் சிதைத்து வளைத்துக் கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்