TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏறப்படாத சிகரம்

October 2 , 2024 52 days 123 0
  • தேசிய மலையேறுதல் மற்றும் சாகச விளையாட்டுக் கழகத்தின் (NIMAS) 15 பேர் கொண்ட குழுவானது அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்-மேற்கு கமெங் பகுதியில் இதுவரை ஏறப்படாத சிகரத்தில் ஏறியுள்ளது.
  • 6வது தலாய் லாமாவின் நினைவாக அதற்கு ‘சங்யாங் கியாட்சோ சிகரம்’ என்று பெயரிட்டுள்ளனர்.
  • இந்தச் சிகரமானது, அருணாச்சலப் பிரதேச இமயமலையின் கோரிசென் மலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 6,383 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • ஆறாவது தலாய் லாமாவான சாங்யாங் கியாட்சோ, 1682 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தின் மோன் தவாங் எனுமிடத்தில் பிறந்தார்.
  • அவர் 1697 ஆம் ஆண்டில் தனது 14 வயதில் ஆறாவது தலாய் லாமாவாக பொறுப்பினை ஏற்றார்.
  • 1706 ஆம் ஆண்டில், அவர் சீனாவுக்கு அழைக்கப்பட்டு, அங்கு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
  • சீனா அரசானது அருணாச்சலப் பிரதேசத்தை ஜங்னான் என்று அழைக்கிறது.
  • மேலும், சீனா தனது உரிமைக் கோரல்களை உறுதிப்படுத்துவதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை 2017 ஆம் ஆண்டு முதல் மாற்றி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்