TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசம் குறித்த அமெரிக்க மசோதா

February 21 , 2023 517 days 253 0
  • அருணாச்சலப் பிரதேசமானது சர்ச்சைக்குரியப் பகுதி அல்ல, அது இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்தப் பகுதி என்று அங்கீகரிப்பது குறித்த ஒரு தீர்மானமானது அமெரிக்க மேலவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இது "மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலவும் தற்போதைய நிலையை மாற்றச் செய்வதற்காக சீனா மேற்கொண்டு வரும் இராணுவ ஆக்கிரமிப்பையும்" கண்டனம் செய்தது.
  • சீனாவிற்கும் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இடையிலான ஒரு சர்வதேச எல்லையாக மெக்மஹோன் எல்லைக் கோடு திகழச் செய்வதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்பதை இந்தத் தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • 1914 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன் மற்றும் திபெத் ஆகியவை இந்த எல்லை வரையறைக்கு ஒப்புதல் அளித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்