TNPSC Thervupettagam

அருணிமா சின்கா – முனைவர் (டாக்டர்) பட்டம்

November 8 , 2018 2130 days 641 0
  • 2013 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் முதல் கைகளற்ற பெண் என்ற பெருமையை அடைந்த இந்திய மலையேற்ற வீரரான அருணிமா சின்கா தனது ஊக்கமளிக்கும் சாதனைகளுக்காக பெருமைமிகு ஐக்கியப் பேரரசுப் பல்கலைக்கழகத்தினால் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றார்.
  • கிளாஸ்கோவில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகத்தினால் சின்கா கௌரவ முனைவர் பட்டம் அளிக்கப்பட்டார்.
  • உலகின் உயரமான சிகரத்தின் மீது ஏறிய முதல் இந்தியப் பெண்மணியான பச்சேந்திரி பாலால் அருணிமா பயிற்சியளிக்கப்பட்டார்.
  • 2013 ஆம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதியன்று, சின்கா 8848 மீட்டர் உயரமுடைய சிகரத்தில் ஏறிய உலகின் முதல் கைகளற்ற பெண்மணி என்ற சாதனையாளராய் உருவெடுத்தார்.
  • ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறிய முதல் கைகளற்ற பெண்மணி என்ற பெருமையை இவர் அடைய இருக்கின்றார்.
  • 2015 ஆம் ஆண்டு இவர் இந்தியாவின் குடிமகன்களுக்கான நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதளிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்