முன்னாள் நிதியமைச்சரான அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24 அன்று புதுடெல்லியில் காலமானார்.
இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 வரை நிதியமைச்சராகவும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
2009 ஆம் ஆண்டு முதல் 2014 வரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
நாட்டை ஒரே சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வந்த GST வரி அறிமுகம், பண மதிப்புழப்பு நடவடிக்கை, ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைத்தல், நொடித்தல் மற்றும் திவால்நிலை சட்டக் குறியீடு அறிமுகம் ஆகியவற்றை இவர் மேற்பார்வையிட்டார்.