அரேபியக் கடலில் உருவான புயல்கள்
November 4 , 2019
1851 days
684
- 1965 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக, அரேபியக் கடலில் இரண்டு புயல்கள் - கியார் புயல் மற்றும் மஹா புயல் - ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன.
- கியார் புயலானது 2007 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோனு புயலுக்குப் பிறகு உருவான இரண்டாவது வலிமை வாய்ந்த புயல் ஆகும்.
- அரேபியக் கடலுடன் ஒப்பிடும் போது வங்காள விரிகுடாவில் புயல்கள் உருவாவது அடிக்கடி நிகழ்கிறது.
- 2019 ஆம் ஆண்டில், அரேபியக் கடலில் நான்கு புயல்கள் உருவாகியுள்ளன.
- ஒடிசாவில் பெரிய அழிவை ஏற்படுத்திய ஃபானி புயலானது 2019 ஆம் ஆண்டில் வங்காள விரிகுடாவில் கடைசியாக உருவான புயல் ஆகும்.
புயலுக்குப் பெயரிடுதல்
- ஃபானி புயல் வங்க தேசத்தால் பெயரிடப் பட்டது.
- கியார் புயல் மியான்மரால் பெயரிடப் பட்டது.
- மஹா புயல் ஓமன் நாட்டினால் பெயரிடப் பட்டது.
Post Views:
684