கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, பெரும் புகழ்பெற்ற 2800 எலோ தரக் குறியைத் தாண்டிய இளம் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு தற்போது இத்தகையச் சாதனையினைப் படைத்த இரண்டாவது இந்தியர் இவரே ஆவார்.
2024 ஆம் ஆண்டு ஐரோப்பிய சதுரங்க கிளப் கோப்பை போட்டியில் அவர் பெற்ற இந்த வெற்றியானது, நேரடி மதிப்பீட்டுப் பட்டியலில் உள்ள உலகின் மூன்றாவது முன்னணி சதுரங்க வீரர் என்ற பெருமையினைப் பெற அவருக்கு உதவியது.
அர்ஜுன் 2800 மதிப்பீட்டுக் குறியைத் தாண்டிய 16வது சதுரங்க வீரர் ஆவார்.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சன் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.