December 8 , 2024
15 days
97
- அர்ஜுன் வாஜ்பாய், சுமார் 8,000 மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் 8வதாக ஷிஷாபங்மா மலையில் (திபெத்தில் உள்ளது) ஏறி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
- இந்த மலையில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையை இது குறிக்கிறது.
- மலை அடிவார முகாமில் இருந்து 72 மணி நேரத்திற்குள் மலை உச்சியினை வேகமாக அடைந்த சாதனையும் இதில் அடங்கும்.
- எவரெஸ்ட் (2010) மற்றும் லோட்சே (2011) ஆகிய சிகரத்தில் ஏறிய இளம் நபர் என்ற ஒரு பெருமையினையும் இவர் கொண்டுள்ளார்.
- அவர் தற்போது பூமியில் உள்ள 14 உயரமான மலைகளில் 8 மலைகளின் உச்சியை அடைந்துள்ளார்.
- 8,000 மீட்டர் உயரம் கொண்ட எட்டு சிகரங்களில் ஏறிய முதல் இந்தியர் என்ற ஒரு பெருமையினையும் இவர் கொண்டுள்ளார்.
Post Views:
97