TNPSC Thervupettagam

அர்ஜென்டினாவில் உள்ள லித்தியம் மற்றும் தாமிரச் சுரங்கம்

January 9 , 2023 560 days 308 0
  • சாத்தியக் கூறுகள் மிக்க கையகப் படுத்துதல் அல்லது நீண்ட கால குத்தகைப் பணிகளுக்காக அர்ஜென்டினாவில் உள்ள இரண்டு லித்தியச் சுரங்கங்கள் மற்றும் ஒரு தாமிரச் சுரங்கம் ஆகியவற்றினை இந்தியா அடையாளம் கண்டுள்ளது.
  • KABIL என்பது தேசிய அலுமினிய நிறுவனம் (Nalco), இந்துஸ்தான் காப்பர் (HCL) மற்றும் MECL ஆகியவற்றின் பங்கேற்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இது உள்நாட்டுச் சந்தையில் முக்கியமான மற்றும் மூலோபாயம் மிக்க கனிமங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக அளவிலான லித்தியம் உற்பத்தியில் அர்ஜென்டினா தற்போது 4வது இடத்தில் உள்ளது.
  • சிலி மற்றும் பொலிவியா ஆகியவற்றுடன் சேர்ந்து, இந்த நாட்டின் வடமேற்குப் பகுதியானது "லித்தியம் முக்கோணம்" என்று அழைக்கப்படுகிறது.
  • உலக அளவிலான லித்தியம் உற்பத்தியில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
  • இலத்தீன் அமெரிக்காவில் சாலார் என்று அழைக்கப் படுகிற இந்த லித்தியம் ஆனது செடெமைன் பாறை உருவாக்கம் மற்றும் உப்புக்கல் வடிவில் காணப் படுகிறது.
  • இதற்கான மற்ற மாற்று வடிவம் அதன் திரவ வடிவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்