TNPSC Thervupettagam

அர்ஜென்டினா லித்தியம் கனிமத் தொகுதிகளில் இந்தியா

December 29 , 2023 204 days 240 0
  • அர்ஜென்டினாவில் உள்ள ஐந்து லித்தியம் கனிமத் தொகுதிகளை ஆய்வு செய்து கனிமம் எடுப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் இந்தியா உள்ளது.
  • ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, முக்கிய தாதுப் பொருட்களைப் பெறுவதற்கான ஒரு வெளிநாட்டுக் கூட்டாண்மையில் கையெழுத்திடுவதற்கான இந்தியாவின் இரண்டாவது முயற்சி இதுவாகும்.
  • 2022 ஆம் ஆண்டில், இரண்டு லித்தியம் மற்றும் மூன்று கோபால்ட் தொகுதிகளுடன் மொத்தம் ஐந்து தொகுதிகளை ஆய்வு செய்து கனிமம் எடுப்பதற்காக ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமங்கள் வழிவகுத்தல் அலுவலகத்துடனான (CMFO) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
  • மொத்தம் 98 மில்லியன் டன்கள் அளவிலான உலகளாவிய லித்தியம் இருப்புக்களில் 21 சதவிகிதம் ஆனது அர்ஜென்டினாவில் காணப்படுகிறது.
  • உலகளாவிய லித்தியம் இருப்பு பங்கில் அர்ஜென்டினா இரண்டாவது இடத்திலும், பொலிவியா முதலிடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்