TNPSC Thervupettagam

அர்டான் கேபிடலின் கடவுச் சீட்டுக் குறியீடு

October 21 , 2020 1368 days 637 0
  • உலகில் மிகவும் சக்திமிக்க கடவுச்சீட்டு கொண்ட நாடாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது.
  • அந்நாட்டின் குடிமக்கள் 129 நாடுகளுக்கு நுழைவு இசைவு அற்ற பயணத்தை மேற்கொள்கின்றனர்.
  • ஜப்பான் ஆனது 2வது இடத்திலும் ஜெர்மனி, ஆஸ்திரியா, லக்ஸம்பெர்க், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • ஸ்பெயின் நாடானது சுவீடன், பெல்ஜியம், பிரான்சு, பின்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவற்றுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியக் கடவுச் சீட்டானது 52 நாடுகளில் நுழைவு இசைவு அற்ற அணுகல் (18 நாடுகளில் நுழைவு இசைவு அற்ற அணுகல் மற்றும் 34 நாடுகளில் தங்கள் பயணத்தின் போது உடனடி நுழைவு இசைவு வசதியினைப் பெறுதல்) வசதியுடன் 58வது இடத்தில் அந்தப் பட்டியலில்  தரவரிசையில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகியவை இரண்டும் 31வதாக தரவரிசைப் படுத்தப் பட்டு, கடைசி இடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்