அர்மேனியாவின் பொறுப்பு பிரதமராக பதவி வகித்த நிக்கோல் பஷீனியன் முன்கூட்டியே நடைபெற்ற தனித் தேர்தலில் கிடைத்த பெருவாரியான வெற்றிக்கு பின்பு மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பஷீனியனின் தலைமையிலான சிவில் ஒப்பந்தக் கட்சியானது மொத்த வாக்குகளில் 70.45% வாக்குகளைப் பெற்றது.
மே மாதத்தில் அரசுக்கெதிராக அமைதியான எதிர்ப்பு பேரணிகளினால் மூத்த தலைவரான சேர்ஷ் சர்கிஸியான் அகற்றப்பட்ட பிறகு பஷீனியன் பிரதமரானார்.