TNPSC Thervupettagam

அர்மேனியா – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

October 8 , 2023 286 days 211 0
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைவதற்கு ஆதரவாக அர்மேனிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.
  • அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஸ்தாபன உடன்படிக்கையான ரோம் சட்டத்தினை அங்கீகரிப்பதற்கு என அர்மேனிய நாட்டின் சட்டமியற்றுபவர்கள் வாக்களித்தனர்.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை உருவாக்கச் செய்த ரோம் சட்டத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த நாடுகள் புதினைக் கைது செய்ய அதிகாரம் கொண்டுள்ளன.
  • புதின் அவர்களின் மண்ணில் கால் வைத்தால், உக்ரைனில் இருந்து குழந்தைகளை நாடு கடத்தியது தொடர்பான போர்க் குற்றங்களுக்காக வேண்டி அவர் மீது குற்றம் சாட்டப்படும்.
  • அர்மேனியா பின்னர் புதின் நாட்டிற்குள் நுழைந்தால் கைது செய்யப்பட மாட்டார் என்று ரஷ்யாவிற்கு உறுதியளிக்க முயன்றது.
  • 2020 ஆம் ஆண்டில், அர்மேனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் ஆறு வார காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு ஒப்பந்தத்தினை மாஸ்கோ கொண்டு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்