TNPSC Thervupettagam

அர்லைன் பச்த் குளோபல் விஷன் விருது 2021

May 9 , 2021 1174 days 537 0
  • ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான கீதா மிட்டல் அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான அர்லைன் பச்த் குளோபல் விஷன் விருதினைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருள் ஒருவராக அறிவிக்கப் பட்டு உள்ளார்.
  • 2021 ஆம் ஆண்டு மே 07 ஆம் நாளன்று நடைபெற்ற இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் IAWJ (International Association of Women Judges) என்ற மாநாட்டின் காணொலி மூலமான துவக்க விழாவின் போது இந்த விருதானது வழங்கப்பட்டு உள்ளது.
  • இவர் இந்த விருதினை மெக்சிகோவைச் சேர்ந்த மார்கரீட்டா லூனா ரமோசுடன் இணைந்து பெறுகிறார்.
  • சர்வதேச பெண் நீதிபதிகள் கூட்டமைப்பானது (Internation Association of Women Judges - IAWJ) 2016 ஆம் ஆண்டில் இந்த விருதினை உருவாக்கியது.
  • நீதிபதி மிட்டல் அவர்கள் இந்த விருதினைப் பெறும் முதல் இந்திய நீதிபதி ஆவார்.
  • நீதிமன்றங்களின் அமர்வு / ஓய்வு பெற்ற நீதிபதிகள், IAWJ அமைப்பிற்கு ஆற்றியப் பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்