TNPSC Thervupettagam

அறிவியல் துறையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 11

February 13 , 2020 1690 days 395 0
  • இந்தத் தினமானது 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அறிவியல் துறையில் சமமான அணுகலை வழங்குதல் மற்றும் அறிவியல் துறையில் அவர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகியவை இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டுக் கொண்டாட்டமானது “அனைவரையும் உள்ளடக்கிய பசுமை வளர்ச்சிக்காக அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பு” என்ற கருப்பொருளில் அனுசரிக்கப்பட்டது.
  • உலகெங்கிலும் 30% பெண்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக இருப்பதால் இந்தத் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்